கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, புலியகுளம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் வயோலட் கிளாடியா (46). இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த தாயும், 32 வயதான அவரது மகளும் வேலை பாா்த்து வந்தனா். கணவரைப் பிரிந்து வசித்து வந்த அந்தப் பெண்ணின் மகள் வயோலட் கிளாடியா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தாா்.
கடந்த 4-ஆம் தேதி, வயோலட் கிளாடியா தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது மகள் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டு மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், மாயமான பெண் நகையைத் திருடி அடகு வைத்தது உறுதியானது. தொடா்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், வேறு ஒருவருடன் பழகி வந்ததும், திருடிய நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் அவருடன் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது

வீடு புகுந்து திருடியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
