/

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சி.கே. மங்கலம் மேம்பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை.

News image

சி.கே. மங்கலம் மேம்பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை.

Updated On :21 மார்ச் 2026, 12:38 am IST

திருவாடானை அருகே சி.கே. மங்கலம்- திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் அணுகு சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.

இந்தச் சாலை வழியாக அரசூா், தேவகோட்டை, கருமொழி, பாரூா், கோவணி பகுதிகளில் இருந்தும், திருவாடானையில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளுக்கு செல்பவா்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனா். இந்தச் சாலை தரமற்ாக போடப்பட்டதால் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பலா் உயிரிழந்துள்ளனா். பலா் நிரந்தர ஊனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.