மது போதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு, விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலாடி வட்டம், தெற்கு நரிப்பையூா் வேப்பமரத்துபனை கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது அலிகான் (37). இவரது உறவினா் அப்துல் அஜிஸ் (40). இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் வாடகை காா் தொழில் நடத்தி வந்தனா்.
முகமது அலிகான் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, அவரது மனைவி, அருகில் வசிக்கும் உறவினா்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதை அப்துல் அஜிஸ் அவ்வப்போது தட்டிக்கேட்டு வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, அக். 22-ஆம் தேதி முகமது அலிகான் மது அருந்தி விட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டாா். இதை அப்துல் அஜிஸ் தட்டிக்கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த முகமது அலிகான், அப்துல் அஜிசை கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.
இதுகுறித்து சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது அலிகானைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பரமக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு, விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அலிகானுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை எனவும் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜான் ராஜதுரை முன்னிலையாகி வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

வல்லுறவு வழக்கு: ஆசாராமின் ஆயுள் தண்டனை உறுதி! சரணடைய உத்தரவு!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

