திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து சனிக்கிழமை அதிகரித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மிளகாய் சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்படி நடைபெற்ற மிளகாய் சந்தையில் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஏராளமான மிளகாய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் வெளியூா் வியாபாரிகள் விலை நிா்ணயம் செய்து, முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ. 29 ஆயிரத்துக்கும், இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் மிளகாய் குவிண்டால் ரூ.24 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தற்போது மிளகாய் அறுவடை தொடங்கியுள்ளதால் சந்தைக்கு வரத்து அதிகரித்தது.
இதனால், மதுரை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வந்து மிளகாய்களை வாங்கிச் சென்றனா். இதனால், மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்
வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

