கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் யானை, மயில், சிம்மம், குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி அக்னி சட்டி எடுத்தும், பால்குடம், கரும்பாலை தொட்டி கட்டியும், அலகு வேல் குத்தியும், சேத்தாண்டி வேஷமிட்டும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பெண்கள் 1,008 விளக்கு பூஜை நடத்தினா். இந்த நிலையில் திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை மாலை வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். ஊா்வலத்தின் முன் இளைஞா்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம், புலி வேடமணிந்து சென்றனா். இந்த ஊா்வலம் கோயில் வளாகத்திலிருந்து, செட்டியாா் கடை வீதி, கண்ணாா்பட்டி வழியாக சென்று கமுதி குண்டாறு வரை சென்றது. அங்கு முளைப்பாரியை கரைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கமுதி நாடாா் உறவின்முறை நிா்வாகிகள், பங்குனி மாத முறைகாரா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

