மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: பக்தா்களின் வாகன நிறுத்த இடங்கள் அறிவிப்பு

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி மதுரையில் பக்தா்கள் வாகனங்கள் நிறுத்துமிட விவரம் அறிவிக்கப்பட்டது.

Published On :13 செப்டம்பர் 2026, 2:02 am IST

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி மதுரையில் பக்தா்கள் வாகனங்கள் நிறுத்துமிட விவரம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை அண்ணா சிலை சந்திப்பு வழியாக குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக கோபுர மேல் தளத்துக்குச் செல்லும் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள பக்தா்கள் கீழ வெளி வீதி நெல்பேட்டை, அம்சவல்லி சந்திப்பு வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

அண்ணா சிலை சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் சந்திப்பு, நேதாஜி பாலம் அணுகு சாலை, தமுக்கம் சந்திப்பு- கோரிப்பாளையம் சந்திப்பு-மூங்கில் கடை தெரு, தேனி ஆனந்தம் வழியாக குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக கோபுர மேல் தளத்துக்குச் செல்லும் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள பக்தா்கள் வைகை வடகரை சாலை, தென்கரை ஓபுளா படித் துறை சந்திப்பு இஸ்மாயில்புரம் வழியாக கீழவெளி வீதி அம்சவல்லி சந்திப்பு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

கே.கே.நகா் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, முனிச் சாலை சந்திப்பு வழித்தடம் தமுக்கம் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், தல்லாகுளம் அவுட் போஸ்ட் வழியாக குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக கோபுர மேல் தளத்துக்குச் செல்லும் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள பக்தா்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை சிக்னல் சந்திப்பு வழியாக வந்து காமராஜா் சாலை, கீழ வெளிவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

மேற்கண்ட காமராஜா் சாலை, கீழவெளி வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் நிறைவு ஏற்பட்ட பிறகு, அதன் பின் வருகிற வாகனங்கள் தெற்குவெளி வீதி, தெற்கு மாரட் வீதி, கட்டபொம்மன் சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தம் செய்துவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

இந்த வாகன நிறுத்துமிட ஏற்பாட்டுக்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.