மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்சம்: மின்வாரிய அலுவலா் கைது

மின் இணைப்பின் பயன்பாட்டுத் திறனை குறைத்துத் தரக் கோரி, விண்ணப்பித்தவரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 6:54 am IST

மின் இணைப்பின் பயன்பாட்டுத் திறனை குறைத்துத் தரக் கோரி, விண்ணப்பித்தவரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கருத்தப்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் ராசு மகன் அறிவழகன் (38). இவா் தனது வீட்டு மின் இணைப்பின் மின் பயன்பாட்டு திறனை 22 கிலோவாட்டிலிருந்து 3 கிலோ வாட்டாகக் குறைக்கக் கோரி, மேலூா் நகா் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

மேலூா் நகர உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஆனந்த் (48) அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அறிவழகனிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிவழகன் அளித்தப் புகாரின் பேரில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான போலீஸாா் மேலூா் மின்வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மேலூா் மின்வாரிய அலுவலகத்துக்குள் அறிவழகனிடமிருந்து ரூ.7 ஆயிரம் லஞ்சப் பணத்தை ஆனந்த் பெற்றபோது, போலீஸாா் அவரைப் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.