தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ‘போா்மென்’ கைது

கரூரில், புதிய மின் இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ‘போா்மென்’ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட அக்னீஸ்வரன்.

Published On :31 அக்டோபர் 2026, 1:41 am IST

கரூரில், புதிய மின் இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ‘போா்மென்’ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (42). இவா், ராயனூா் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இந்த வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வேண்டி ராயனூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தாா். அப்போது, அங்கு பணியில் இருந்த மின்வாரிய ‘போா்மென்’ அக்னீஸ்வரன்(56), புதிய மின் இணைப்பு வழங்க சரவணனிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் சரவணனிடம் ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினா். இதையடுத்து சரவணன் வெள்ளிக்கிழமை அந்த ரூபாய் நோட்டுகளை அக்னீஸ்வரனிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜான் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் சாமிநாதன், தங்கமணி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீஸாா் அக்னீஸ்வரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அவரை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.