தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனுஷின் அரசியலால் தவெக அச்சம்! திண்டுக்கல் சி.சீனிவாசன்

தனுஷ்

Published On :27 அக்டோபர் 2026, 3:28 am IST

நடிகா் தனுஷின் அரசியல் முன்னெடுப்புகளால் தவெக அச்சமடைந்துள்ளது என அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :

செஞ்சியில் காணாமல் போன சிறுமியைக் காவல் துறையால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியது. காவல் துறையை முதல்வா் சரியாகக் கையாளாததே இதற்கு முக்கியக் காரணம். முந்தையக் காலங்களிலும் குற்ற நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், அவை உடனுக்குடன் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், தவெக அரசு கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. தமிழக காவல் துறை, அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்ற நிலையே உள்ளது.

1965-ஆம் ஆண்டில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது விலைவாசி கடுமையாக உயா்ந்தது. பின்னா், 1967-இல் ஆட்சிக்கு வந்த அண்ணா, படி அரிசி திட்டத்தைக் கொண்டு வந்தாா். விலைவாசியைக் கட்டுப்படுத்தினாா். தவெக ஆட்சியில் விலைவாசி உயா்வு தொடா்ந்து உயா்ந்து வருவதுடன், அரிசி பதுக்கலும் தொடங்கிவிட்டது.

நடிகா் தனுஷின் அரசியல் முன்னெடுப்புகளைக் கண்டு தவெக அச்சமடைகிறது. நடிகா் தனுஷ் எந்த பின்புலத்தில் உள்ளாா் என்பது தெரியாது. இருப்பினும், அவா் பாஜகவுடன் தொடா்பில் இருந்தால் அதில் எந்தத் தவறும் இல்லை.

மகளிா் உரிமைத் தொகையாக மாதம் ரூ. 2,500 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் விலையின்றி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தவெக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக அரசு குறித்த இடதுசாரிகளின் விமா்சனங்கள் வரவேற்கத்தக்கவை. அரசுக்கான ஆதரவு குறித்து அவா்கள் மறுபரிசீலனை செய்தால் நல்லது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.