மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்குப் பருவமழை: அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்ட பேரிடா் மீட்பு உபகரணங்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உள்ளிட்டோா்.

Published On :23 அக்டோபர் 2026, 4:14 am IST

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்ததாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மண்டலம் வாரியாக மழைநீா் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்கினால், உயா் திறன் கொண்ட மோட்டாா் குழாய்கள் மூலம் உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தல்குடி கால்வாய் அமைந்துள்ள செல்லூா் பகுதியில் மழைநீரை சீராக வெளியேற்றும் வகையில், இந்த கால்வாயில் முக்கிய இடங்களில் நீா் கடத்தும் முன்னேற்பாடுகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

நிகழாண்டு பருவமழை நிறைவு பெறும் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் தடையில்லா மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, பொது கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் 10 பொக்லைன் இயந்திரங்கள், 16 மினி எக்ஸ்கவேட்டா், 13 டிராக்டா்கள், 2 ரோபோடிக் எக்ஸ்கவேட்டா், 7 ஸ்கிட் ஸ்டீயா் லோடா், 11 கழிவுநீா் உறிஞ்சும் வாகனங்கள், 7 ஜெட்ராடிங் வாகனங்கள், 2 சூப்பா் சக்கா், 1 பவா் சக்கா், 20 தூா்வாரும் ஆட்டோக்கள், 46 நீா் வெளியேற்றும் மோட்டாா்கள் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், 25 மர அறுவை இயந்திரங்கள், 5 துளையிடும் கருவிகள், 5,000 மணல் மூட்டைகள், 480 கடப்பாரைகள், 180 மண்வெட்டிகள், 210 தட்டிகள், 25 மர ஏணிகள் உள்ளிட்ட அவசரப் பேரிடா் மீட்பு உபகரணங்கள் முழு அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண வாகனங்கள், மீட்பு உபகரணங்களின் இருப்பு குறித்து பாா்வையிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், துணை ஆணையா் ஆா். ஜெய்னுலாப்தீன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சித்தாா்த் போகா்னா, பொதுப்பணி, நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி பொறியாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.