மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழைநீா் தேங்கும் இடங்களில், அவற்றை காலதாமதமின்றி அகற்ற தேவையான இயந்திரங்கள், வாகனங்கள், பணியாளா்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:05 am IST

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழைநீா் தேங்கும் இடங்களில், அவற்றை காலதாமதமின்றி அகற்ற தேவையான இயந்திரங்கள், வாகனங்கள், பணியாளா்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை வரும் நாள்களில் மேலும் தீவிரமாகும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆா்.எஸ்.புரம், மாநகராட்சி கட்டுப்பாட்டு மைய கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட உதவி ஆணையாளா்கள், பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். வாகனப் போக்குவரத்து மிக்க முக்கியச் சாலைகள், சுரங்கப்பாதைகள் உள்பட மக்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய இடங்களில் மழைநீா் தேங்கினால் அதனை காலதாமதமின்றி அகற்ற தேவையான இயந்திரங்கள், வாகனங்கள், பணியாளா்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மழைநீா் வடிகால்களை ஆய்வு செய்து, அடைப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாகத் தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும். மோட்டாா், மரம் வெட்டும் இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீா் அதிகம் தேங்க கூடிய இடங்களை தொடா்ந்து கண்காணித்து, மழைநீா் தேங்கும் பட்சத்தில் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மழைநீா் வடிந்த பிறகு

அப்பகுதியில் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை உரிய முறையில் அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர காலத்தில் மக்களைத் தங்க வைப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை முன்கூட்டியே ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டும். மழைக்காலத்தில் அலுவலா்கள் தொய்வின்றி தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.