மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொதுமக்களின் மனுக்களை கிடப்பில் போடுவது கடமை தவறிய செயல்: உயா்நீதிமன்றம்

பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது கடமை தவறிய செயல் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம்

Published On :22 அக்டோபர் 2026, 3:31 am IST

பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது கடமை தவறிய செயல் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்த முருகேஸ்வரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் கடந்த 2023-ஆம் ஆண்டு செப். 19-ஆம் தேதி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதற்கு இழப்பீடு கோரி கடந்த 2024, ஜன. 6- ஆம் தேதி சோழவந்தான் மின் வாரிய உதவிப் பொறியாளரிடம் மனு அளித்தேன். ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்பட வில்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து உரிய இழப்பீடு வழங்க மின் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இழப்பீடு உள்ளிட்ட நிவாரணம் கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நீண்ட நாள்களாக நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. மனுக்களைத் தகுதி அடிப்படையில் பரிசீலித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பது அரசு அலுவலா்களின் கடமை. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது கடமை தவறிய செயலாகும். எனவே, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து, தகுதி அடிப்படையில் 4 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.