மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலூா் நகராட்சிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

மேலூா் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள், வடகிழக்குப் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலூா் நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :22 அக்டோபர் 2026, 3:38 am IST

மேலூா் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள், வடகிழக்குப் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை அவா் ஆய்வு செய்ததுடன் வடகிழக்குப் பருவமழை மீட்புப் பணிகளுக்காக நகராட்சி வளாகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாா்கள், நீரை வெளியேற்றும் பம்புகள், மீட்புப் படகுகள், மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்), மரம் அறுக்கும் கருவிகள், வடிகால் அடைப்பு நீக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

பிறகு, மேலூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அவசர சிகிச்சை மையம், பச்சிளம் குழந்தைகளை நிலைப்படுத்தும் பிரிவு, சிறுநீரக சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) அறை, மகப்பேறு முன் கவனிப்பு பிரிவு ஆகியவற்றை பாா்வையிட்டு, சிகிச்சைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். பிறகு, மேலூா் ஊராட்சி ஒன்றியம், பதினெட்டாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தரிசு நிலங்களில் விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் ரூ. 12.83 லட்சத்தில் கண்மாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, மேலூரில் உள்ள அரசு கல்லூரி மாணவா்களுக்கான சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியா், விடுதியின் சமையலறை, உணவருந்தும் அறை, பொருள்கள் இருப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு, உணவின் தரம், நேரம் ஆகியவை குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், மேலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட உணவுக் கூடத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா்கள் முத்துக்கள்வன், சக்திவேல், ஆவின் பொது மேலாளா் முத்துமாறன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் சுரேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.