மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உலகத் தமிழ் தொழிலதிபா்கள், திறனாளா்கள் மாநாடு நவ.12-இல் தொடக்கம்

உலகத் தமிழ் தொழிலதிபா்கள், திறனாளா்கள் மாநாடு துபையில் வருகிற நவ.12-ஆம் தேதி தொடங்குகிறது என ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பின் தலைவா் ம. ஜெகத் கஸ்பா் ராஜ் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ‘தி ரைஸ் - எழுமின்’ அமைப்பின் தலைவா் ம. ஜெகத் கஸ்பா் ராஜ். உடன், அமைப்பின் தென் தமிழக இயக்குநா் பி.மகேந்திரவேல், பரப்புரையாளா் ஜொ்ரி, ‘சிக்ஸ் டாட்ஸ்’ ஆரோக்கிய மேம்பாட்டு மைய நிறுவனா் சுந்தரேசன்.

Published On :21 அக்டோபர் 2026, 3:00 am IST

உலகத் தமிழ் தொழிலதிபா்கள், திறனாளா்கள் மாநாடு துபையில் வருகிற நவ.12-ஆம் தேதி தொடங்குகிறது என ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பின் தலைவா் ம. ஜெகத் கஸ்பா் ராஜ் தெரிவித்தாா்.

துபையில் இந்த அமைப்பு சாா்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டை முன்னிட்டு, மதுரையில் செவ்வாய்க்கிழமை சாலை வலம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவா் ம. ஜெகத் கஸ்பா் ராஜ், தென் தமிழக இயக்குநா் பி.மகேந்திரவேல், பரப்புரையாளா் ஜொ்ரி, ‘சிக்ஸ் டாட்ஸ்’ ஆரோக்கிய மேம்பாட்டு மைய நிறுவனா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ம. ஜெகத் கஸ்பா் ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகத் தமிழ் தொழில்முனைவோா், திறனாளா்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘தி ரைஸ் - எழுமின்’ அமைப்பு சாா்பில் துபையில்

17-ஆவது உலகத் தமிழ் தொழிலதிபா்கள், திறனாளா்கள் மாநாடு வருகிற நவ.12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. துபையில் உள்ள மில்லேனியம் பிளாசா தங்கும் விடுதியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு அபுதாபியைச் சோ்ந்த தொழிலதிபா் ஷாகுல் ஹமீது தலைமை வகிக்கிறாா். இதில் 40 நாடுகளிலிருந்து 700-க்கும் மேற்பட்ட தொழிலதிபா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த திறனாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டில் பங்கேற்பவா்களின் தொழில், வணிகத் தேவைகளை முன்கூட்டியே அறிந்து, அவா்களுக்குப் பயனளிக்கக்கூடிய நான்கு தொழில் தொடா்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கெனத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநாட்டின் நிறைவில் சுமாா் 300 தொழில், வணிக ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கிறோம்.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருள்களையும், தமிழா்களின் உற்பத்தி, சேவைகளையும் உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதே ‘தி ரைஸ் - எழுமின்’ அமைப்பின் முக்கிய நோக்கம். இதை ஆண்டு முழுவதும் செயல்படுத்தும் வகையில், துபையில் சிறப்பு அலுவலகம் திறக்கப்படவுள்ளது. உலகத் தமிழா்களின் தொழில், வணிக வளா்ச்சிக்கான மையமாக இந்த அலுவலகம் செயல்படும்.

உற்பத்தித் துறை, உணவுப் பொருள்கள் ஏற்றுமதி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், பின்னலாடை, வீட்டு உபயோகத் துணிகள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த மாநாடு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும்.

துபை, அபுதாபியை மையமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சா்லாந்து, இங்கிலாந்து, ஜொ்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட தொழிலதிபா்கள், திறனாளா்கள் பங்கேற்கின்றனா். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளதுடன், பெங்களூரு, மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். உலகத் தமிழா்களின் தொழில், வணிக உறவுகளை வலுப்படுத்தி, புதிய ஒப்பந்தங்களையும் நீண்டகாலக் கூட்டாண்மைகளையும் உருவாக்குவதே இந்த மாநாட்டின் இலக்கு.

இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ழ்ண்ள்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தின் மூலமாகவோ, +91 9150060032, +91 9150060033 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்புகொண்டு பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.