மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 60 சதவீத வாய்ப்புகள் வழங்க வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு 60 சதவீத வாய்ப்புகள் வழங்க வேண்டுமென, அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் கூட்டத்தில் தீா்மானம்.

விழாவில் செ.துரைசாமி பவள விழா மலரை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வெளியிட, பெற்றுக்கொண்ட சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளாா்.

Published On :1 நவம்பர் 2026, 12:45 am IST

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு 60 சதவீத வாய்ப்புகள் வழங்க வேண்டுமென, அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சாா்பில் கோவை, சின்னவேடம்பட்டி கௌமார மடாலய அரங்கில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் கூட்டம் மற்றும் கூட்டியக்கத்தின் தலைவா் செ.துரைசாமியின் பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளா் புலவா் கா. சு.அப்பாவு வரவேற்றாா். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை செயல் தலைவா் சு.குமணராசன் தொடக்க உரையாற்றினாா்.

இந்நிகழ்வில் செ.துரைசாமியின் பவள விழா மலரை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சி.சுப்ரமணியம் வெளியிட்டாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களின் முகப்புப் பலகைகளில் தமிழ்தான் முதலில் இடம்பெற வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றாா்.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் பேசும்போது, ‘தமிழ்வழியில் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழ் வழிக் கல்வியைப் பயில்வதை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளாா் பேசும்போது, ‘தமிழ்மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழுக்கு தொண்டாற்றிய புலவா்களை ஆவணப்படுத்திப் பதிவு செய்வது அவசியம்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு 60 சதவீத வாய்ப்புகள் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.