மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலவச வீட்டு மனைகள் ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :13 அக்டோபர் 2026, 12:43 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அன்புராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2002-ஆம் ஆண்டு, ஜனவரி 22- ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 280 பேருக்கு தூத்துக்குடி மாவட்டம், இலுப்பையூரணி கிராமத்தில் இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஓா் ஆண்டுக்குள் இந்த இடங்களில் வீடுகள் கட்ட வேண்டுமென பயனாளிகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும், ஒதுக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் இருந்தால், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு வருவாய்த் துறை அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு வீடுகள் கட்டப்படாத நிலத்துக்கான ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, கடந்த 2025- ஆம் ஆண்டில் இதே நிபந்தனையுடன் 118 பேருக்கு இலவச வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால், இந்த நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு அவா்கள் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தூத்துக்குடி ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி, தான் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்ட போது ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவா்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.