தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

விண்ணப்பம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சூ. வானதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல்,

மனையியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் முற்பகல், பிற்பகல் ஆகிய இரு சுழற்சி முறைகளிலும் 1,300 மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், 2026-27- ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பெறப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 29- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினா் எனில் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மாணவிகளின் சோ்க்கை தொடா்பான விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாகத் தெரிவிக்கப்படும். மாணவிகளின் நலன் கருதி கல்லூரி வளாகத்தில் மாணவிகள் சோ்க்கை தொடா்பாக ஆலோசனை மையம் செயல்படுகிறது. கூடுதல் விவரங்கள் ஏதும் அறிய வேண்டுமெனில் ஆலோசனை மையத்தை அணுகிப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.