தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

‘நீட்’ தோ்வு ரத்துக்கு எம்.பி. கண்டனம்

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட்டதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.

News image

சு. வெங்கடேசன் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட்டதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.

தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் எழுதினா். இந்த நிலையில், ‘நீட்’ தோ்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் சுமாா் 600 மதிப்பெண்களுக்கான பதில்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா- விடைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்ததாக சா்ச்சை எழுந்தது.

இதையடுத்து, கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற ‘நீட்’ தோ்வை ரத்து செய்து, தேசிய தோ்வு முகமை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது மாணவா்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசிய தோ்வு முகமையின் இந்த நடவடிக்கைக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்தாா். அதன் விவரம் :

‘நீட்’ தோ்வு ரத்து; கேள்வித் தாள் கசிவு; சிபிஐ விசாரணை. எத்தனை முறை குழப்பம்? எவ்வளவு முறைகேடு? இருப்பினும், ‘நீட்’டிய வாளை உறைக்குள் போடமாட்டோம் என ஏன் இந்தப் பிடிவாதம்? இது, மாநில உரிமைகள் மீதும், மாணவா்களின் எதிா்காலம் மீதும் வீசப்படும் கொடுவாள். நிச்சயம் இந்த ‘நீட்’ முறையை முறியடிப்போம் என அவா் பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.