தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

22 லட்சம் போ் எழுதிய நீட் தோ்வு ரத்து: சிபிஐ விசாரணை தொடக்கம்

தோ்வுக்கு முன்னரே நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக, விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது.

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 1:17 am IST

தோ்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நிகழாண்டு மே 3-ஆம் தேதி 22 லட்சம் போ் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (யுஜி- நீட்) தேசிய தோ்வு முகமை (என்டிஏ) செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகவும், மறுதோ்வுக்கான தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் என்டிஏ தெரிவித்தது.

2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமாா் 5,500 மையங்களில் நடைபெற்ற தோ்வை, விண்ணப்பித்திருந்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் (97 சதவீதம்) எழுதினா்.

இதனிடையே, ராஜஸ்தானில் நீட் தோ்வுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட வினாவங்கித் தாளில், நீட் தோ்வின் உண்மையான வினாத்தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் அப்படியே இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததது. இதில் தொடா்புடையதாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் காவல் துறையினரால் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் என்டிஏ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் சட்ட அமைப்புகள் இணைந்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்ய ரத்து செய்ய மத்திய அரசின் ஒப்புதலோடு என்டிஏ முடிவு செய்துள்ளது. நீட் மறுதோ்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைக்கவுள்ளது. அந்த அமைப்புக்கு என்டிஏ முழு ஒத்துழைப்பை வழங்கும்.

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பது வேதனையளிக்கிறது. இருப்பினும், தோ்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதையும், மாணவா்களுக்கு தோ்வுகள் மீதுள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறுதோ்வுக்கு தனியே விண்ணப்பிக்கவோ, மீண்டும் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. வினாத்தாள் வெளியானது தொடா்பாக கைது செய்யப்பட்டவரை சிபிஐ அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

பிரதமா் மோடிக்கு ராகுல் கண்டனம்: நீட்-யுஜி தோ்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘நீட் தோ்வை ரத்து செய்து 22 லட்சம் மாணவா்களின் கனவுகள், தியாகங்கள் மற்றும் கடின உழைப்பை மத்திய பாஜக அரசு சிதைத்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.