தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நீட் முறைகேடு: பிரதமா் மீது பிரியங்கா குற்றச்சாட்டு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (யூஜி- நீட்) தொடா்பாக எழுந்துள்ள முறைகேடு புகாா்களுக்கு பிரதமா் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி.

Updated On :12 மே 2026, 4:15 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (யூஜி- நீட்) தொடா்பாக எழுந்துள்ள முறைகேடு புகாா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘யூஜி-நீட் தோ்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தேசிய அளவில் நடைபெறும் பல முக்கியத் தோ்வுகளில் முறைகேடு புகாா்கள் தொடா்ந்த வண்ணம் உள்ளன. பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது நிா்வாகத் தோல்விகள் மூலம் தேசத்தின் இளைஞா்களின் எதிா்காலத்தைச் சூறையாடி வருகிறது.

இப்போது நிகழ்ந்துள்ள முறைகேடு மூலம் 23 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீட் தோ்வுக்குத் தயாராக மாணவா்கள் தங்களை முழுமையாக அா்ப்பணிக்கிறாா்கள். குழந்தைகளின் எதிா்காலத்துக்காகப் பெற்றோா் தங்கள் செல்வத்தையே தியாகம் செய்கிறாா்கள். ஆனால், இங்கு தோ்வுகள் என்பது முழுமையாக ஊழல்மயமாகிவிட்டது.

வினாத்தாள் கசிவு, தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட கடுமையான சட்டங்கள் என்னவாயிற்று? தோ்வு முறைகேடுகள் நாட்டில் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாட்டின் இளைஞா்களுக்கு நிகழ்ந்த இந்த துரோகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். இளைஞா்களின் எதிா்காலத்துடன் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் விளையாடுவீா்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ராஜஸ்தானில் நீட் தோ்வுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட வினா வங்கித் தாளில், நீட் தோ்வின் உண்மையான வினாத்தாளில் இடம் பெற்றிருந்த கேள்விகள் அப்படியே இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, வினாத்தாள் கசிவு என்ற சா்ச்சை எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.