பாரதிய ஜனதா கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் (எல்.டி.எஃப்.) இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளம், கண்ணூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “பாரதிய ஜனதா கட்சிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதனால் தான் சபரிமலை கோயிலில் அதிகளவிலான தங்க முறைகேடு நடந்தபோதிலும் அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை.
நான் தற்போது வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளேன். ஆகையால் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அருகில் இருந்து காண்கிறேன். உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக நீங்கள் எவ்வளவு சிரமங்களை சந்தித்து வருகிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.
மேலும், கேரளாவில் இளைஞர்களை அதிகம் சந்திக்கிறேன். அதில் பெரும்பாலோனோர் படித்தவர்களாக உள்ளனர். ஆனால் பலபேரிடம் வேலை இல்லை. அப்படி வேலை செய்தாலும் அவர்கள் வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
Summary
Congress MP Priyanka Gandhi has stated that there is a secret pact between the Bharatiya Janata Party and the Left Democratic Front (LDF).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

எல்டிஎஃப் ஊழல் மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும்: பிரியங்கா காந்தி

மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்தி வருத்தம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


