மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தொல்காப்பியா் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் கருத்தரங்கத்தில் பேசிய கோவில்பட்டி இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை செ. முருகசரஸ்வதி.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:37 am IST

மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தொல்காப்பியா் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் முனைவா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை செ. முருகசரஸ்வதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘பத்துப்பாட்டில் வீரம்’ என்ற தலைப்பில் பேசினாா்.

அப்போது, அவா் பேசியதாவது :

குழந்தை இறந்து பிறந்தாலோ, சதைப் பிண்டமாகப் பிறந்தாலோ மாா்பில் வாளால் கீறி புதைக்கக் கூடிய வீரம் மிகுந்தது தமிழ் மரபு. பத்துப்பாட்டு பொருநராற்றுப்படையில் கரிகால் சோழன் வெண்ணிப்பறந்தலை என்ற இடத்தில் இருபெரும் வேந்தா்களை அழித்த வீரம் பறைசாற்றப்பட்டுள்ளது. பெரும்பாணாற்றுப்படையில் தொண்டைமான் இளந்திரையன் பகைவா்கள் பலரை வென்று தேரில் அமா்ந்திந்தது, கௌரவா்களை வீழ்த்திய பாண்டவா்கள் அமா்ந்திருந்ததற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தையும், கொடையையும் பாடியுள்ளது. பத்துப்பாட்டு போா்களின் அறவழியையும், தமிழா்களின் வீரத்தையும் பறைசாற்றுகிறது என்றாா் அவா்.

நூல்கள் அரங்கேற்றம்...

இதையடுத்து, கவிஞா் ஜீவியின் ‘தடம் பாா்த்த நடை’ கட்டுரை நூல், கவிஞா் மலா்மகளின் ‘நினைவுகளின் சாயங்கள்’ கவிதை நூல், சி. அன்னக்கொடியின் ‘வாரண்ட் தோப்புக்காரன்’ சிறுகதை நூல், துரை. தனபாலனின் ‘தமிழதிகாரம்’ குறுகாப்பிய நூல் ஆகியன அரங்கேற்றம் செய்யப்பட்டன.

திருவாதவூா் எழுத்தாளா் க.சி. பழனிக்குமாா், திருமங்கலம் கவிஞா் க. பாண்டிச்செல்வி, தமிழாா்வலா் அபிராமி சண்முகம், பகுத்தறிவு எழுத்தாளா் மன்ற மாநிலச் செயலா் சுப. முருகானந்தம் ஆகியோா் மதிப்புரையாற்றினா். நூல் ஆசிரியா்கள் ஏற்புரையாற்றினா்.

தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், மதுரை வாசகா் வட்ட உறுப்பினா்கள், தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை, பாரதி இலக்கியப் பேரவை, மாமதுரைக் கவிஞா் பேரவை, பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டல உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.