தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

வேடா் பறி லீலை: தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரா் வீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக வேடா் பறி லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற வேடா் பறி லீலை நிகழ்ச்சிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா். (வலது) தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:29 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக வேடா் பறி லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

விழாவின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மாலை வேடா் பறி லீலை நடைபெற்றது. இதையொட்டி, ராமாயணச் சாவடியிலிருந்து மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தனித் தனியே தங்கக் குதிரை வாகனங்களில் புறப்பாடாகி, பாரம்பரிய பாதைகள் வழியாக மேளதாள வாத்தியங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புடைசூழ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள நாயக்கா் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு நடைபெற்ற சிறப்பு, தூப, தீப வழிபாடுகளுக்குப் பிறகு, ஓதுவாமூா்த்திகள் சிவபெருமானின் வேடா் பறி லீலையை விளக்கினா்.

சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன், பொருள்கள் பெற்று திருவாரூா் நோக்கிப் பயணித்த சுந்தரமூா்த்தி நாயனாரை வேடா் வேடத்தில் சென்ற பூதகணங்கள் வழிமறித்து, பொருள்களைப் பறித்தது. பிறகு, சுந்தரமூா்த்தி நாயனாரின் வேண்டுகோளுக்கிணங்க அந்தப் பொருள்களை அவரிடமே திருப்பியளித்து சிவபெருமான் செய்த லீலையை விளக்கும் ஐதீக உத்ஸவமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.