மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கே.கே.நகா் அலங்கார வளைவு தோ்தலுக்குப் பிறகு அகற்றப்படுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த சரவணன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், கே.கே. நகா், வில்லாபுரம், விராட்டிபத்து, தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. இந்த வளைவுகளால் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மதுரை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மாட்டுத்தாவணி முன் இருந்த அலங்கார வளைவு ஏற்கெனவே அகற்றப்பட்டது. கே.கே.நகா் அலங்கார வளைவு தோ்தலுக்குப் பிறகு அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
தோ்தல் முடிந்த பிறகு கே.கே.நகா் அலங்கார வளைவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிற அலங்கார வளைவுகளையும் 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

