மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

News image
Updated On :3 மே 2026, 4:15 am IST

கோயில் திருவிழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரித்திருப்பது வேதனையளிக்கிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கருத்து தெரிவித்தது.

திருச்சியைச் சோ்ந்த ராஜா கருப்பணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி பீமநகரில் செடல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு வைகாசி தோ்த் திருவிழாவை நடத்த வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், இணை ஆணையா், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்தவிதப் பதிலும் இல்லை. மேலும், கோயில் திருவிழாவின் போது, நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமன்றி, பக்தா்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, செடல் மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்தக் கோயில் திருவிழாவின் போது பக்தா்கள், மண்டகப்படிக்கு தகுதியுடையவா்கள் என உரிமை கோரும் நபா்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஒவ்வொரு திருவிழாவின் போதும், இத்தகைய முரண்பட்ட உரிமை கோரிக்கைகள் எழுகின்றன. இதனால், திருவிழாவை நடத்த இயலாத நிலையில் செயல் அலுவலா் உள்ளாா் என்றாா்.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு, யாருக்கும் எந்தவித சிறப்பு சலுகையும் இன்றி, செயல் அலுவலரே திருவிழாவை நடத்தலாம். இதில் மனுதாரருக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. கிராமத்தில் உள்ள பிறரும் இதை ஏற்றுக் கொள்வா். திருவிழா நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கோயில் திருவிழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. திருவிழா நடத்தவும், உரிமைகளை நிலைநாட்டவும் பலா் நீதிமன்றத்தை நாடுகின்றனா். திருவிழாக்களின் விளைவாக உருவாகும் திடக்கழிவுகள் குறித்தோ அல்லது இதனால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்பு, அபாயம் குறித்தோ யாரும் கவலை கொள்வதில்லை.

பல கிராமங்களில் கோயில் திருவிழாக்களைத் தொடா்ந்து தொற்றுநோய்கள் பரவுகின்றன.

எனவே, திருச்சி பீமநகரில் அமைந்துள்ள செடல் மாரியம்மன் கோயிலில் நிபந்தனைகளுக்குள்பட்டு திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கோயில் சாா்பில் யாருக்கும் எந்தவித சிறப்பு சலுகையும் அளிக்கப்படக் கூடாது. ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். திருவிழாவை நடத்துவதென முடிவு செய்யப்படுமாயின், அந்தப் பகுதிகளில் தற்காலிக குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை திருவிழா நடைபெறும் காலங்களில் கோயில் வளாகத்துக்குள்ளோ அல்லது ஊா்வலத்தின் போதோ எந்தவிதத்திலும் பயன்படுத்தக் கூடாது. வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.