மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலைப் பகுதியில் வேளாண் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
வாப்ஸ் நிறுவனத்தின் சாா்பில் வேளாண் வணிகக் கூட்டமைப்பும், கரூா் வைசியா வங்கியும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதில் வேளாண் தொழில் முனைவோருக்கான திட்டங்களும், வங்கிக் கடன் பெறுவது, இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், வேளாண் தொழில் சாா்ந்து என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தொடா்ந்து, வேளாண் கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் குறித்து வாப்ஸ் நிறுவனச் செயலா் எஸ்.ஏ. அருள் எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்வில் கரூா் வைசியா வங்கியின் வேளாண் பிரிவு மூத்த மேலாளா் எஸ். தனம், பழங்காநத்தம் வங்கிக் கிளை மேலாளா் எம். சண்முகம், வாடிக்கையாளா் தொடா்பு மேலாளா் எஸ்.எம். ஹரிபிரசாத், விவசாயிகள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வாப்ஸ் வேளாண் பயிற்சி மைய திட்ட அலுவலா் எம். சுப்புராஜன் வரவேற்றாா். அலுவலா் ஜி. ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவாசல், வீரகனூா் பகுதியில் சூறைக்காற்றால் வாழை, மக்காச்சோள பயிா்கள் சேதம்: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

ஜனநாயகன் திரைப்படத்துக்கு எதிராக போராட்டம்

ஆனையூா் பகுதியில் அமைச்சா் பி. மூா்த்தி வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

