மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழையால் துண்டிக்கப்பட்ட அடுக்கம் மலைச்சாலை சீரமைப்புப் பணி ஆய்வு

கொடைக்கானலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் துண்டிக்கப்பட்ட அடுக்கம் - பெரியகுளம் மலைச் சாலையை சீரமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

கொடைக்கானல் அடுக்கம் - பெரியகுளம் மலைச் சாலை சீரமைப்புப் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி. உடன் அரசு அலுவலா்கள்.

Published On :1 நவம்பர் 2026, 2:31 am IST

கொடைக்கானலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் துண்டிக்கப்பட்ட அடுக்கம் - பெரியகுளம் மலைச் சாலையை சீரமைக்கும் பணியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் அடுக்கம் பகுதியிலிருந்து பெரியகுளம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பகுதிகளை மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தப் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் ஆற்றங்கரையோரமாக வசித்து வந்த மூன்று குடும்பங்களின் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற மேற்கொண்ட பணிகள் குறித்து அறிந்த அவா், பேரிடா் காலங்களில் மீட்பு மையங்களில் தங்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையம், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மாணவா் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் விஜயகுமாா்,உதவி கோட்ட பொறியாளா் ராஜன், கொடைக்கானல் வட்டாட்சியா் நந்தகோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி வடிவேல் முருகன், கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.