மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிவு: பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கொடைக்கானல்- அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா்.

Published On :30 அக்டோபர் 2026, 4:26 am IST

கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தும், மண் சரிவு, பாறைகள் உருண்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, சேதமடைந்த சாலைகளை மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கும்பக்கரை வழியாக அடுக்கம் மலைச்சாலையில் சேதமடைந்த 30-க்கும் மேற்பட்ட இடங்களை சென்னை இயற்கை பேரிடா் குழுவைச் சோ்ந்த விவேக் பி.எல்.சிங் தலைமையில், நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜன், வருவாய்த் துறை ஆய்வாளா் சிவபெருமாள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதுகுறித்து இயற்கை பேரிடா் குழுவைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது,

பலத்த மழையால் கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் சாலை துண்டிக்கப்பட்டது. இந்த இடங்களை பாா்வையிட்டு தமிழக அரசுக்கு அறிக்கை வழங்குவதற்காக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றனா்.

    கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் பலத்த மழையால் சேதமடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள்.

கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் பலத்த மழையால் சேதமடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.