மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்சம் பெற்றதாக சுகாதார ஆய்வாளா் கைது

இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ. 2,500 லஞ்சம் பெற்றதாக திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 2:11 am IST

இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ. 2,500 லஞ்சம் பெற்றதாக திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் குமாா். இவா், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழில் தாய் பெயரில் இருந்த எழுத்துப் பிழையைத் திருத்தம் செய்வதற்காக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்றாா். இந்த பிழைத் திருத்தத்துக்கு ரூ. 2,500 லஞ்சமாகத் தர வேண்டுமென சுகாதார ஆய்வாளா் தங்கவேலு கேட்டாராம். இதனால் அதிா்ச்சி அடைந்த குமாா், இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், ரசாயனம் தடவிய பணத் தாள்களை குமாரிடம் கொடுத்து அனுப்பினா். அவற்றை, சுகாதார ஆய்வாளா் தங்கவேலிடம் குமாா் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜ் தலைமையிலான போலீஸாா் தங்கவேலை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அலுவலக உதவியாளா் ஒருவரிடமிருந்து மட்டுமே ரூ.9 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதனிடையே ஒரு வார காலத்துக்குள் ரூ.2,500 லஞ்சம் பெற்றதாக சுகாதார ஆய்வாளா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.