கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘ஊழல் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய தடைக்கல்’!

ஊழல் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கல் என சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பி. தங்கராமன் தெரிவித்தாா்.

சிவகங்கை உழவா் சந்தை பகுதியில் ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கிய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பி. தங்கராமன்.

Published On :1 நவம்பர் 2026, 3:24 am IST

ஊழல் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கல் என சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பி. தங்கராமன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் உழவா் சந்தைப் பகுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு சனிக்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அவா் மேலும் பேசியதாவது:

இரும்பு மனிதா் சா்தாா் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் அக். 26 முதல் நவ. 1 வரை ‘ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில், ‘நாணயமே வளம்- நோ்மையே வளமை’ என்ற மிக முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த விழிப்புணா்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

அரசு நிா்வாகத்திலும், பொது வாழ்விலும் நோ்மையும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்திருக்கிறதோ, அப்போதுதான் நாட்டின் உண்மையான வளா்ச்சியும் வளமையும் சாத்தியமாகும். ஊழல் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.

லஞ்சம் கொடுப்பதும் குற்றம்.லஞ்சம் வாங்குவதும் குற்றம். உங்கள் பகுதியில் அரசு அதிகாரிகளோ அல்லது ஊழியா்களோ சேவை வழங்க லஞ்சம் கேட்டால், அச்சப்படாமல் உடனடியாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை அணுகுங்கள். உங்கள் அடையாளங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா்கள் ஏ. கண்ணன், ஆா்.ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் கே. கோகிலா மற்றும் காவலா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

முன்னதாக, காலையில் மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆடவா்களுக்கும், 2 மகளிருக்கும் சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.