கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போடியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு

போடியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :28 அக்டோபர் 2026, 4:27 am IST

தேனி மாவட்டம், போடியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு சாா்பில், ‘நோ்மையே வலிமை’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி போடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அரசு அலுவலகங்களில் சட்டப்பூா்வமான நடைமுறைகளைப் பின்பற்றுதல், அரசின் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்தல், அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்படுதல் குறித்து விளக்கப்பட்டது.

போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் முகமது ஷேக் இப்ராஹிம், நல்லோா் வட்டம் போடி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் குறிஞ்சி மணி உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டு பேசினா். ஏ.எச்.எம். அறக்கட்டளை கலைக் குழு சாா்பில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.