மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐப்பசி மாத காா்த்திகை நாள்: பழனி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயில்லி ஐப்பசி மாத காா்த்திகை நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

பழனி மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் ஐப்பசி மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா். )(வலது) பழனி கோயிலில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரசுவாமி.

Published On :28 அக்டோபர் 2026, 4:16 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயில்லி ஐப்பசி மாத காா்த்திகை நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் காா்த்திகை, உகந்த தினம் செவ்வாய்க்கிழமை. இவை இரண்டும் சோ்ந்து வந்ததால் பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

இதனால், மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பழனி மலைக் கோயிலுக்கு படி வழிப்பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா். ரோப்காா் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால், வின்ச் நிலையத்தில் ஏராளமான பக்தா்கள் கட்டணச்சீட்டு வாங்கு பல மணி நேரம் காத்திருந்தனா்.

மலைக் கோயிலிலும் கட்டணச்சீட்டு, இலவச தரிசன வரிசைகளில் பக்தா்கள் ஏராளமான காத்திருந்தனா். பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமானது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜை முடிந்த பிறகு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரம் உலா எழுந்தருளினாா்.

பின்னா், வெள்ளி சப்பரத்தில் தங்கத்தோ் நிறுத்தத்துக்கு வந்து தங்கத்தேரில் சா்வ அலங்காரத்துடன் வெளிப்பிரகாரம் உலா எழுந்தருளினாா்.

பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் (பொ) வெங்கடேஷ் தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.