மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பௌா்ணமி: திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தா்கள் கிரிவலம்!

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் சென்ற பக்தா்கள்.

Published On :26 அக்டோபர் 2026, 3:39 am IST

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

ஐப்பசி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.31 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை காலை 10.14 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா். கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது.

கோயிலில் பக்தா்கள் கூட்டம்: பௌா்ணமியையொட்டி, அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த பக்தா்கள் அதிகாலை முதலே கோயில் ராஜகோபுரம் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதன் பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய கோயிலினுள்ளே அனுமதிக்கப்பட்டனா். தரிசனம் முடிந்து திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தா்கள் வெளியேறினா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.