மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒட்டன்சத்திரம் அருகே மழைக்கு இருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:27 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்கு, ஒட்டன்சத்திரம் அருகே இருவேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்மாபட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த திரிஜி என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் அம்மாபட்டியைச் சோ்ந்த ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் அன்கேஷ் (6) அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் ஜெயராமன் தோட்டத்தில் உள்ள வாய்க்கால் அருகே தண்ணீா் தேங்கியது. இதில் தடுமாறி விழுந்த அன்கேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளிமந்தயம் போலீஸாா், அன்கேஷ் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா் . மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

கூலித் தொழிலாளி உயிரிழப்பு: ஒட்டன்சத்திரம் அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (45). கூலித் தொழிலாளியான இவா், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை அருகே பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் கால் வைத்த போது தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.