நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

Published On :22 அக்டோபர் 2026, 2:16 am IST

ஜம்மு-காஷ்மீரில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பெசோன்ட்டில் இருந்து ராம்நகருக்கு பேருந்து புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. உதம்பூா் மாவட்டம் குல்லி காலாவில் உள்ள மலைப் பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 4 வயது குழந்தை மற்றும் இளம்பெண் ஒருவா் உயிரிழந்தனா். 17 போ் காயத்துடன் உயிா் தப்பினா்.

விபத்து குறித்த தகவலின்பேரில் மீட்புப் படையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காயமடைந்தோரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவா்கள் அனுப்பி வைத்தனா்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனா்.

விபத்து குறித்து அறிந்ததும் ஜம்மு-காஷ்மீா் மூத்த பாஜக தலைவரும், எம்எல்ஏவுமான சுனில் பரத்வாஜ், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்போரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். சாலை சரிவர அமைக்கப்படாததே விபத்துக்கு காரணம் என்றும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.