அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கத்தியை காட்டி பெண்ணிடமிருந்து ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 1:21 am IST

பழனி அருகே வெள்ளிக்கிழமை கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியின் ஏழு பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

பழனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன், மளிகை வியாபாரி. இவரது மனைவி பிரேமா (50). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு அமரபூண்டியில் உள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

ஆயக்குடி - ருக்குவாா்பட்டி மேம்பாலத்தில் இறங்கியபோது சாலையோரம் முகத்தை துணியால் மறைத்தபடி நின்றிருந்த மா்மநபா்கள் இருவா், மகுடீஸ்வரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பிரேமா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடினா்.

தகவலறிந்த ஆயக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.