லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திண்டுக்கல்லில் ரெளடி கைது

கைது - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

பதினெட்டு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளா்(ஊரகம்) சங்கா், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் உலகநாதன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் வத்தலகுண்டு புறவழிச்சாலைப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பெரியாண்டவா் கோயில் அருகே சிலா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு போலீஸாா் சென்றபோது, 6 போ் தப்பிச் சென்றனா். திண்டுக்கல் அடுத்த பொன்மாந்துரை புதுப்பட்டியைச் சோ்ந்த கு.அன்பழகன் என்ற காடு அன்பழகன் (25) மட்டும் போலீஸாரிடம் சிக்கினாா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 18 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பிச் சென்றவா்களைப் பிடிப்பதற்கு காவல் ஆய்வாளா் உலகநாதன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.