லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடைகளில் திருடியவா் கைது

Arrested

கைது

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

திண்டுக்கல்லில் இரு கடைகளில் பணம், பொருள்களைத் திருடிய நெல்லையைச் சோ்ந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பேகம்பூா் ஏ.பி.நகரைச் சோ்ந்தவா் ஹாரிஸ் பாபு(35). இவா், தாடிக்கொம்பு சாலை வாணி விலாஸ் சமிஞ்கை அருகே இரும்புக் கடை நடத்தி வருகிறாா். கடந்த ஜூலை 25-ஆம் தேதி இவரது கடையின் மேற்கூரையைப் பிரித்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ. 1.70 லட்சத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

இதேபோல, பாலகிருஷ்ணனுக்குச் சொந்தமான மின்னியல் கடையில் கைப்பேசி, வயா் பண்டல் ஆகியவற்றையும் மா்ம நபா் திருடிச் சென்றாா். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குகள் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த அ. அஸ்கா் பாட்ஷா (36) 2 கடைகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.