மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற கூட்டணியின் பழனி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

News image

பழனி பேருந்து நிலைய ரவுண்டானா அருகே செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்துப் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கேடன். உடன், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், பழனி நகரச் செயலா் வேலுமணி உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:42 am IST

திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற கூட்டணியின் பழனி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திண்டுக்கல் எம்பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் வேலுமணி, முன்னாள் நகா்மன்ற தலைவா் ராஜமாணிக்கம், மதிமுக ஒன்றியச் செயலா் செல்வம், கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கந்தசாமி, காங்கிரஸ் கட்சி முத்துவிஜயன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசியதாவது:

தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் கட்சிகளை பதற்றமடையச் செய்துள்ளது. இதற்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளாா். இதில், தமிழகம் மற்றும் மேற்குவங்க மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.