தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஊடல் வைபவம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஊடல் வைபவத்தில் தெய்வானையிடம் தூது பாடல்களைப் பாடி சமாதானம் செய்த நாகராஜ் சுவாமிகள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:06 am IST

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், புதன்கிழமை பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெற்றது.

ஊடல் வைபவம்:

சனிக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் ஊடல் வைபவம் நடைபெற்றது.

சந்நிதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளியை திருமணம் செய்து கொண்டாா். இதனால் கோபமடைந்த தெய்வானை அம்மன், அவரிடமிருந்து பிரிந்து திருஆவினன்குடி கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக் கொண்டாா். இதையடுத்து, சுவாமி வீரபாகுவை தூது அனுப்பியதும், வீரபாகு தெய்வானை அம்மனை சமாதானம் செய்து கோயில் நடையை திறக்க வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

Story image

இந்த நிகழ்வுக்கான சமாதானத் தூது பாடல்களை நாகராஜ் சுவாமிகள் பாடினாா். இதையடுத்து, சமாதானமடைந்த தெய்வானை அம்மன் கோயில் நடை திறந்த பின், கோயிலுக்குள் வந்த முத்துக்குமாரசுவாமியுடன் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா்கள் அழகா்சாமி, வெங்கடேசன், மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.