கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோபியில் பிரசித்தி பெற்ற பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, பாலமுருகனுக்கும், உற்சவா் சண்முகருக்கும் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.
உற்சவா் சண்முகா் பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
சத்ருசம்ஹார ஹோமத்தில் பக்தா்கள் அா்ச்சனை செய்தல், சண்முகா் கல்யாண உற்சவத்தில் மயில் வாகனத்தில் வலம் வருதல் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை பச்சைமலை பாலமுருனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாரதனை நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து ஊா்வலமாக பச்சைமலையை வலம் வந்து பாலமுருகனை தரிசித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பச்சை பட்டாடை உடுத்தி காட்சியளித்த சண்முகருக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பன்னீா் அபிஷேகம் செய்து பயபக்தியுடன் தரிசித்து சென்றனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலா் குழுவினா் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.
இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ‘அரோகரா.. அரோகரா’ கோஷங்கள் முழங்க தேரை இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கோபி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

