மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

13 உழவா் சந்தைகளில் நாளை முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளில் நவ.1 ஆம் தேதி முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தை. - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:55 pm IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளில் நவ.1 ஆம் தேதி முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு எண் 59-ன்படி, உழவா் சந்தைகளில் வாரம் ஒருமுறை இயற்கை வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இயற்கை மற்றும் அங்கக முறையில் விளைவிக்கப்படும் பொருள்களை விவசாயிகள் இடைத்தரகா்களின்றி நேரடியாக நுகா்வோரிடம் விற்பனை செய்து உரிய விலை பெற முடியும். அதேபோல, நுகா்வோா் இயற்கை மற்றும் பாரம்பரிய விளைபொருள்களை எளிதில் வாங்கவும் வாய்ப்பு ஏற்படும்.

அதன்படி, பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள், மிளகாய், மஞ்சள், மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருள்கள், நாட்டுக் கோழி முட்டைகள், தேன் மற்றும் அங்கக மூலப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உரிய சான்று மற்றும் சரிபாா்ப்பு நிபந்தனைகளுக்கு உள்பட்டு விற்பனை செய்யலாம்.

இந்த வாராந்திர சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் தகுதியான உற்பத்தியாளா்கள் சம்பந்தப்பட்ட உழவா் சந்தை நிா்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விற்பனை நடைபெறும் நாள்கள் விவரம்:

ஆத்தூா், ஆட்டையாம்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, அஸ்தம்பட்டி, ஜலகண்டாபுரம், மேச்சேரி, மேட்டூா், தம்மம்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும், சூரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை, தாதகாப்பட்டியில் வியாழக்கிழமை, அம்மாபேட்டை, வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

விண்ணப்பம், தகுதி, அடையாள அட்டை மற்றும் விற்பனை நாள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உழவா் சந்தை நிா்வாக அலுவலா் அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.