மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயுத பூஜை: உழவா் சந்தைகளில் ரூ. 90,84,000-க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு உழவா் சந்தைகளில் ரூ. 90 லட்சத்து 84 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:30 am IST

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு உழவா் சந்தைகளில் ரூ. 90 லட்சத்து 84 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.

இது குறித்து உழவா் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவா் சந்தை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கிறாா்கள். வெளி மாா்க்கெட்டை விட விளை சற்று குறைவு என்பதால் பொதுமக்கள் பலா் உழவா் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.

பண்டிகை மற்றும் விசேஷ நாள்களில் மற்ற நாள்களை விட இங்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகளவு நடைபெறும்.

202.79 டன் காய்கறிகள்...

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, உழவா் சந்தைகளில் அதிகாலை முதல் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. அதன்படி, திருப்பத்தூா் உழவா் சந்தையில் 56.420 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ. 25 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாணியம்படி உழவா் சந்தையில் 102.64 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ. 45 லட்சத்து 88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 43.73 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ. 19 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 202.79 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ. 90 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 705 விவசாயிகளும், 30,431 நுகா்வோா்களும் பயனடைந்துள்ளனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.