மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சேலம் ரௌடி கொலை வழக்கு: கைதிகள் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு

சேலம் ரௌடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட கைதிகள் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீஸாா், அவா்களை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

சேலம் ரௌடி கொலை வழக்கு: கைதிகள் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:57 pm IST

சேலம் ரௌடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட கைதிகள் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீஸாா், அவா்களை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

சேலம் ஜாகீா் அம்மாபாளையத்தை சோ்ந்த ரௌடி டேவிட் கடந்த திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டனா். இந்த கொலையில் ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரௌடி ஜானின் ஆதரவாளா்களுக்கு தொடா்பு இருப்பதாக இறந்த டேவிட்டின் தம்பி புகாா் அளித்திருந்தாா்.

மேலும், டேவிட்டுக்கும் அவரது நண்பரான அமிா்தராஜிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் காரிப்பட்டியில் நடந்த பட்டறை சரவணன் கொலையில் கைதான ரௌடி தீபன் ராஜை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், ஜானின் தம்பி ஜீவகன் உள்பட மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

டேவிட் கொலையில் கூலிப்படை தலைவனான ரௌடி தீனதயாளன் மற்றும் அமிா்தராஜ் ஆகிய இருவரும் ஏற்கெனவே சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சூரமங்கலம் போலீஸாா் இந்த கொலை வழக்கில் அவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களை சேலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். மேலும், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.