நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ரௌடி இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம்: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

கொலை வழக்கு - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:46 am IST

நாகா்கோவில் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி சுரேஷ் (43) இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இறச்சகுளம் பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் மீது தேரூா் இரட்டைக் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுரேஷ் தனது வீட்டில் அக். 23ஆம் தேதி இறந்து கிடந்தாா். இதையடுத்து, அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது.

சுரேஷ் 2 மாதங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும் அவரது மனைவி பாரதி (37) அளித்த தகவலின்பேரில், பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சுரேஷின் உடற்கூறாய்வில் அவரது கழுத்தில் காயம் இருந்தது தெரிய வந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சுரேஷின் மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.