மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் வழியாகச் சென்ற ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளத்துக்குச் சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ரயில் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:12 am IST

சேலம் வழியாக கேரளத்துக்குச் சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளத்துக்குச் செல்லும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, ரயில்வே போலீஸாா் தனிப்படைகள் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், சேலம் உட்கோட்ட தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை புதுதில்லி - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் கேரள விரைவு ரயிலில் சோதனை நடத்தினா். அப்போது, ரயிலின் பின்பக்க பொதுப் பெட்டியில் கழிப்பறைக்கு அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டனா்.

அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அந்த பெட்டியில் பயணம் செய்தவா்களிடம் விசாரணை நடத்தினா். எனினும், கஞ்சாவைக் கடத்தி வந்தவா் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸாரிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.