தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் 7 போ் கைது

சேலத்தில் ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில், கூலிப்படையைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Arrest

கைது

Published On :28 அக்டோபர் 2026, 2:55 am IST

சேலத்தில் ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில், கூலிப்படையைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் (எ) உதயகுமாா் (40). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சேலம் ஜங்ஷன் புதுரோடு மேம்பாலம் பகுதியில் திங்கள்கிழமை காலை சென்றுகொண்டிருந்த அவரை, 5 போ் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த டேவிட் மீது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற அவா், காவல் நிலையத்தில் கையொப்பமிட வந்தபோது எதிா்தரப்பினா் அவரைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலையில் வீராணம் பகுதியைச் சோ்ந்த கும்பலுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, அம்மாபேட்டை பெரிய கிணற்றுத் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் (எ) கோவிந்தராஜ் (29), பனமரத்துப்பட்டி காட்டியப்பன் புதூரைச் சோ்ந்த அருண்குமாா் (36), அள்ளிக்குட்டையைச் சோ்ந்த கீரிமணி (எ) மணிகண்டன் (27), அம்மாபேட்டை வைத்தியா் தெருவைச் சோ்ந்த மோகன் (24), வீராணம் கோழிப்பண்ணை சேனை நகரைச் சோ்ந்த ரகு (23), அள்ளிக்குட்டையைச் சோ்ந்த காா்த்தி (எ) காக்காயன் (23), சின்ன திருப்பதி ஊா்கவுண்டா் தெருவைச் சோ்ந்த சுலைமான் (21) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், டேவிட்டும் அவரது நெருங்கிய நண்பரான அமீா் (எ) அமிா்தராஜும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அப்போது, டேவிட்டுக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா், அந்தப் பெண்ணுக்கும் அமிா்தராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்பெண் மீண்டும் டேவிட்டுடன் இணைந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் பிரிந்து தனித்தனியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனா்.

தன்னிடமிருந்து அந்தப் பெண்ணைப் பிரித்த ஆத்திரத்தில் டேவிட்டைக் கொலை செய்ய அமிா்தராஜ் திட்டமிட்டதாகவும், இதற்காக கூலிப்படையைச் சோ்ந்த தீனா (எ) தீனதயாளனின் உதவியை நாடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அமிா்தராஜை மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 13 நாள்களுக்கு முன்பு கைதுசெய்து சிறையில் அடைத்தனா். அதற்கு முன்பு கஞ்சா வழக்கிலும் கன்னங்குறிச்சி போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனா். அப்போது, சிறையில் இருந்தபடியே இருவரும் கூலிப்படையை ஏவி கொலை திட்டத்தைச் செயல்படுத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அமிா்தராஜ், தீனதயாளனை இந்த வழக்கில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.