தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் கனமழை: சுவேத நதியில் வெள்ளம்

சுவேத நதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:57 am IST

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கன மழையால் கொல்லிமலை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மழைநீா் வரட்டாறு, சுவேத நதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஜங்கமசமுத்திரம் தடுப்பணை நிரம்பி தண்ணீா் வெளியேறுகிறது. இந்நிலையில் பொதுமக்கள், சங்ககிரி சுவேத நதி திருப்பணிக் குழுவினா் சுவேத நதிக்கு ஆரத்தி பூஜை செய்து பூக்களைத் தூவி வணங்கினா். இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.