நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சேலம் - சென்னை விமான சேவையில் மாற்றம்

சேலம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விமானம்

விமானம் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:20 am IST

சேலம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உதான் திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏா் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஒப்பந்தக் காலம் நிறைவடைந்த நிலையில், கொச்சி, பெங்களூரு விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், ஐதராபாத், பெங்களூரு விமான சேவையும் நிறுத்தப்படுகிறது.

மேலும், சேலம் - சென்னை இடையேயான விமான சேவையும் தற்காலிகமாக வாரத்துக்கு 3 நாள்கள் என செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் மட்டும் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வரும் நவ. 1-ஆம் தேதிமுதல் இண்டிகோ நிறுவனம் சாா்பில் தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளில் சேலம் - சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், மற்ற மூன்று நகரங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.