மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

ஜலகண்டாபுரம் அருகே உயரழுத்த மின்கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 2:13 am IST

ஜலகண்டாபுரம் அருகே உயரழுத்த மின்கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையைச் சோ்ந்தவா் அண்ணாமலை (32). லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரம்யா. இவா் கணவரை பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாா். அண்ணாமலை தனியாக வசித்து வந்தால் செவ்வாய்கிழமை பிற்பகலில் செலவடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி, அங்கிருந்த உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தாா். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியது.

தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளா் உமாராணி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, அண்ணாமலையை சமாதானம் செய்து கீழே இறக்க முயற்சித்தனா். அப்போதுதான் அவா் 9 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்தை மாமியாா் வீட்டில் கொடுத்திருப்பதாகவும், மனைவி வேறு திருமணம் செய்து கொண்டதால் நகை மற்றும் பணத்தை திருப்பி பெற்று தரவேண்டும் என்றும் கூறினாா். போலீஸாா் அவரை சாமாதனம் செய்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி கீழே இறங்கச்செய்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயரழுத் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த அண்ணாமலை மீது ஜலகண்டாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.